ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை... முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பேசினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்ப, துன்பங்களை மறந்து ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன். ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது. மக்களை காக்கும் காவலர்களை காக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதைவிட குற்றங்களை தடுப்பதே முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். மக்களின் நிம்மதியை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு காவல்துறையிடம்தான் உள்ளது. கடைநிலை காவலர்களிடம் கூட உயர் அதிகாரிகள் தோழமையாக இருக்க வேண்டும்” என்றார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!