தமிழகமே அதிர்ச்சி... தீவிரமாக பரவும் எலிக்காய்ச்சல்... குழந்தை பரிதாப பலி.. 14 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

 

கொரோனா காலத்துக்கு பிறகு, விதவிதமான காய்ச்சல்கள் உலகம் முழுவதையுமே உலுக்கி எடுக்கிறது. கர்நாடக மக்கள் குரங்கு காய்ச்சலால் அலறிக் கொண்டிருக்கும் போது, பெரும் அதிர்ச்சியாக தமிழகத்தில் எலி காய்ச்சல் பரவி வருவதாக வெளியான தகவல் பதைபதைக்க செய்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியானது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.



பின்னர் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இ குறித்து உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு எலிக்காய்ச்சல் இருப்பதாக பரிசோதனை முடிவு வந்துள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எலி காய்ச்சல் பரவி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!