undefined

போதையில் சீரழியும் தமிழகம்... அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழப்பு!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கி குடித்தவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு பல இடங்களிலும் அதிகமாக திறந்து வைத்து தமிழகத்தை போதைக்கு அடிமையாக்கும் வேலையை முக்கிய பணியாக செய்து வருகிறது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் காளியப்பன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரில் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து, அதில் தங்கி இருந்தபடியே தச்சு வேலை செய்து வந்தார்.

இவர் வேலை முடிந்ததும் தினசரி இரவு மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு படுக்கையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!