undefined

நவ.1 உள்ளாட்சிகள் தினத்தில் நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு!

 
 

 


தமிழகம் முழுவதும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஜனவரி 26 - குடியரசு தினம், மார்ச் 29- உலக தண்ணீர் தினம், மே 1 - தொழிலாளர் தினம்,  ஆகஸ்ட் 15- சுதந்திர தினம்,  அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி, நம்பர் 1 - உள்ளாட்சிகள் தினம் ஆகிய  6 நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தையொட்டி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாபளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு அடுத்தநாளான நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொது விடுமுறையாகவும், இந்த பொது விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9ம் தேதி முழு வேலை நாளாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. 

இந்த அறிவிப்பின் மூலமாக தீபாவளி பண்டிகையை உறவினர்களுடன் சொந்த ஊரில் கொண்டாடச் செல்பவர்கள் வார இறுதி நாட்களையும் சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையில் பண்டிகையைக் கொண்டாட முடியும் வகையில் உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நவம்பர் 1ம் தேதி  உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தையும் மற்றொரு நாளில் மாற்றி வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்று நவ.1 அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பா.பொன்னையா அறிவித்துள்ளார். கிராம சபைக் கூட்டம் நடைபெறும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!