undefined

விரைவில்  வடகிழக்குப்பருவமழை... பேனர்களை அகற்ற தமிழக அரசு உத்தரவு!

 

 தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில்  வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணிபுரிந்த  சமீரன், குமாரவேல் பாண்டியன், மேக்னாத்ரெட்டி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பருவமழை பணிகளை மண்டல வாரியாக துரிதப்படுத்தி முடிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த அதிகாரிகள் நியமனம்  நடைபெற்றது.  


வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய பேனர்களை அகற்ற உத்தரவிடப்பட்ட நிலையில்  சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவின் கீழ் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  பிறமாவட்டங்களிலும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவது  குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை