undefined

தமிழகத்தில் செப்.17ம் தேதி பொது விடுமுறை… வெளியானது அறிவிப்பு!

 

இன்று செப்டம்பர் 6ம் தேதி பிறை 1 என கணக்கிடப்படுகிறது. அதனால் செப்.17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் விடுமுறை நாட்களில் இம்மாதம் செப்டம்பர் 16ம் தேதி மிலாது  நபி பண்டிகையையொட்டி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் செப்டம்பர் 4ம் தேதி பிறை தெரியாததால், செப்டம்பர் 17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி தெரிவித்திருந்தார். 

தமிழக அரசின் தலைமை ஹாஜி இது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், செப் 4ம் தேதி ‌ பிறை தெரியும் என்று ஹரிசியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பிறை தெரியாத காரணத்தினால் செப்.17ம் தேதி மிலாது நபி பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 17ம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 4ம் தேதி பிறை தென்படாததால், ஸஃபர் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து செப். 6ம் தேதி பிறை 1 என்ற அடிப்படையில் செப். 17ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் செப்டம்பர் 17ம் தேதி மிலாது நபியன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா