undefined

 

இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்... முழு பயண விவரம்!

 
இன்று ஆகஸ்ட் 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து அரசு முறை பயணமாக சர்வதேச முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்ப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் பொருளாதாரத்தின் மதிப்பை வரும் 2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடியாக  உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கடந்த ஜனவரி 7ம் தேதி சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற  தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ.68,773 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1,06800 பேருக்கு உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் பொருளாதார இலக்கை எட்டுவதன்  ஒரு பகுதியாக இன்று இரவு தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். நாளை ஆகஸ்ட் 28ம் தேதி காலை சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்திக்கிறார் முதல்வர். தொடர்ந்து நாளை மறுநாள் ஆகஸ்ட் 29ம் தேதி முதலீட்டாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 31ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேசுகிறார். 

அதன் பின்னர் செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டு சிகாகோ செல்கிறார். அங்கு தொடர்ந்து 10 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு முக்கிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அதன் பின்னர் செப்டம்பர் 7ம் தேதி சிகாகோவில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 17 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12ம் தேதி சென்னை திரும்புகிறார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை