நெகிழ்ச்சி... அமெரிக்காவில் பெற்றோரை இழந்த தமிழக குழந்தை  2 வருடத்திற்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு!

 

 அமெரிக்காவின் மிஸிஸிட்டி மாகாணத்தில்  தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட  தமிழ்செல்வி, பிரவீன் குமார் தம்பதியினர்  2022ல்  தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் 2 வயது மகன் விஷ்ரூத். இந்த குழந்தையை அமெரிக்கா அரசு பஞ்சாப் தம்பதிக்கு தத்து கொடுத்து விட்டது. இந்நிலையில் குழந்தையின் பாட்டி, சித்தி இதனை எதிர்த்து போராடினர்.  2 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்கு பின்னர், குழந்தை மீட்கப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.  குழந்தையை மீட்க உதவிய தமிழ்நாடு அரசுக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 


குழந்தையின் சித்தி அபிநயா உடனடியாக அமெரிக்கா சென்று குழந்தையை தத்தெடுத்த பஞ்சாபி தம்பதியினர் மீது வழக்கு தொடர்ந்தார். இவருக்கு ஆதரவாக  அமெரிக்க தமிழ்ச்சங்கம், தமிழ் ஆர்வலர்கள் பலரும் உதவி செய்தனர்.  அமெரிக்காவில் பெற்றோரை இழந்து தவித்த குழந்தையை  உறவினர்களிடம்  ஒப்படைக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அயலக தமிழ் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு முதல்வர்  உத்தரவு பிறப்பித்தார்.

அயலக தமிழ் நல வாரிய பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதன் அடிப்படையில்  பஞ்சாபி தம்பதியினர் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 2 ஆண்டுகால தொடர் சட்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டு  தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டது.  பிரவீன் குமாரின் பெற்றோர் சென்னை விமான நிலையத்தில் தங்களது 2 வயது பேரனை  கட்டித் தழுவி கண்ணீர் வடித்தனர். இந்நிகழ்வு அனைவரிடத்திலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்