undefined

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வைரஸ் காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழக முதல்வர் ஓய்வெடுக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த இரு தினங்களாகவே காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வியாழன் அன்று தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், நேற்று மற்றும் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில் முதல்வரை பரிசோதித்த மருத்துவ குழு, அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!