undefined

தமிழர் சிங்கப்பூரின் 9வது அதிபரானார்...!!

 

சிங்கப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற  அதிபர் தேர்தலில் தமிழரான  தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவர் இன்று சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சிங்கப்பூர் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தர்மன் சண்முகரத்னம்,  1957 சிங்கப்பூரில் பிறந்தவர்.

இவரது தாத்தா, பாட்டி இருவரும் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று   குடியேறியவர்கள். சண்முகரத்னத்தின் தந்தை கனகரத்தினம் மருத்துவத் துறையில் பேராசிரியராக பணிபுரிந்தவர்.  சண்முகரத்னம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர். இவரது மனைவி ஜேன் யுமிகோ இடோகி. முன்னாள் வழக்கறிஞரான இவர் சமூக சேவகி.  இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர்.


 சண்முகரத்னம்  1988ல்  சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்கத்தின் மூத்த பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டவர். சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில்  2011ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை