undefined

பொது வெளியில் 2 பேரை சுட்டுக்கொன்ற தலிபான் அரசு.. மக்கள் கண் முன்னே குற்றவாளிக்கு தண்டனை!

 

2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி அன்று முதல் நாட்டையே நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, பெண்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் தலிபான்கள் குற்றம் சாட்டப்பட்ட சிலரை பொதுவெளியில் தூக்கிலிடுகின்றனர்.

அந்த வகையில் இன்று ஆப்கானிஸ்தானில் 2 பேருக்கு பொது இடத்தில் தலிபான்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றினர். கஜினி நகரின் அலி லாலா பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனினும், கொல்லப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தலிபான்கள் எந்த தகவலையும் வெளியிடவில்லை. தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுன்சாடாவின் உத்தரவின் பேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!