undefined

ஆணுறைகளில் கட்சி சின்னம்... களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்!

 

ஆந்திரப் பிரதேச அரசியல் களத்தில் ஆணுறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் ஆணுறைகள் பிரச்சார கருவியாக மாறியுள்ளது. இரு பிரதான கட்சிகளும் தங்களது கட்சி சின்னங்கள் அச்சிடப்பட்ட பொட்டலங்களை பொதுமக்களுக்கு விநியோகித்துள்ளன. 

லோக்சபா தேர்தலுக்காக வீடு வீடாக பிரசாரம் செய்து வரும் கட்சி தலைவர்களும் ஆணுறை பாக்கெட்டுகளை வினியோகித்து வருகின்றனர். இருவரும் ஒரே வேலையை செய்வதால், கட்சி சின்னத்துடன் கூடிய ஆணுறைகளை விநியோகம் செய்வதாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் திட்டி வருகின்றனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ட்விட்டர் பதிவில், தெலுங்கு தேசம் கட்சி எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று சாடியுள்ளது. "இது ஆணுறையுடன் நிறுத்தப்படுமா அல்லது பொதுமக்களுக்கு வயாகரா விநியோகிக்கத் தொடங்குமா?" என்று ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதைப்போல் தெலுங்கு தேசம் கட்சியின் ட்விட்டர் பதிவிலும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விமர்சித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!