undefined

இனிப்புக்கள், டீ வாங்கி கொடுத்து மாநாட்டிற்கு நூதன அழைப்பு... தவெக நிர்வாகிகள் அட்ராசிட்டி!

 

 தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை  அக்டோபர் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது.   50,000 இருக்கைகளுடன் பிரமாண்டமாக தயாராகி வரும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற. தேசிய தலைவர்ளுடன் விஜய்யின் பிரமாண்டமாக கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்களையும் பொதுமக்களையும் அழைத்து வர கட்சி நிர்வாகிகள் பல்வேறு முறைகளில்  ஏற்பாடு செய்து வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் ஆத்தூர் ஒன்றிய தொண்டரணி தலைவர் லலித் மற்றும் ராகுல், மதன், மாதேஷ் சார்பாக  த.வெ.க., நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இலவசமாக டீ வாங்கிக் கொடுத்து, இனிப்புகள் வழங்கி  மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

 அத்துடன் கண்ணைகவரும், விளக்குகளை கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் நூதன  அழைப்பு விடுக்கின்றனர் த.வெ.க., நிர்வாகிகள்.  மாநாட்டில் கலந்துகொள்ள நூதனமாக பிரச்சாரம் செய்து வரும் இவர்களிடம் பொதுமக்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்து வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!