undefined

 திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்... எஸ்வி சேகர் அந்தர் பல்டி!

 


 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சேகர், சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.வி.சேகர், “நாடக பிரியா நாடக குழுவின் 50 வது ஆண்டு இதுவரை 7000 நாடகம் நடத்தியுள்ளது.  நவம்பர் 17 ம் தேதி தனது தந்தையின் 100 ஆண்டு பிறந்தநாள், இதனையொட்டி இந்த நிகழ்வில் முதல்வர் துணை முதல்வர் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்புவிடுத்ததாக கூறினார். கமல்ஹாசன் தன்னை இனி உலக நாயகன் என அழைக்க கூடாது என அறிவித்துள்ளார்.

அது மகிழ்ச்சி தான், கமல்ஹாசன் பிறக்கும் போது கமலஹாசன் என தான் பெயர் வைத்து உள்ளனர், பட்டத்தை எல்லாம் தூக்கி கொண்டு அலையகூடாது, கமலஹாசன் எடுத்த முடிவு சரியானது.அண்ணாமலை எனும் பெயர் கேட்டாலே காதில் விழா மாட்டேங்கிறது. அண்ணாமலை உள்ளவரை அரசியல் தரம் கெட்டு தான் இருக்கும், அவரை போன்ற மோசமான தலைவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பது அசிங்கமாக கருதுகிறேன். எனவே எனது உறுப்பினர் அட்டையை ரினிவல் செய்யவில்லை, நான் அரசியலை விட்டு விலகி எல்லோருக்கும் பிடித்த தமிழனாக திராவிடனாக இருக்கவே விரும்புகிறேன்.

தமிழகத்தில் பிராமணர்களை இனப் படுகொலை செய்தது பாஜக தான், தமிழகத்தில் பிராமணர்கள் பல பேருக்கு புரிதல் இல்லை. திக வேறு, திமுக வேறு, அரசு மகளிருக்கு இலவச பேருந்து விடுகின்றனர். பிராமணர்களுக்கு கிடையாது என கூறுகின்றனரா? 
பிராமண சமுதாயத்திற்கு சட்டமன்ற தேர்தலில் அந்தணர் முன்னேற்ற வாரியம் அமைத்தால் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். பாஜக எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை, 261 கிரிமினல்கள் பாஜகவில் இருக்கின்றனர். திருடர்கள் இருக்கும் இடத்தில் எனக்கு என்ன வேலை?” என பேசியுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!