undefined

ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை..  காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறை!

 

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையினர் பல்வேறு உணவுக் கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். திருச்சியில் சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராகவன் தலைமையில் அதிகாரிகள் தேனியில் உள்ள பல்வேறு உணவு மொத்த விற்பனை கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில், தேனி  பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள கடையில் சோதனையிட்டபோது, ​​காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் அடங்கிய பெட்டிகளை பறிமுதல் செய்து, அகற்றி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள  பாண்டியன் டிரேடரஸ், காலாவதியான  பல்வேறு உணவுப் பொருட்கள், உணவுப் பொருள்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால், 25 ஆயிரம் அபராதம் விதித்து, உணவுப் பாதுகாப்புத் துறையினர் கடையை இழுத்து சீல் வைத்தனர்.

பின்னர் நேரு சிலை அருகே உள்ள ஆவின் பாலகத்தில் காலாவதியான குளிர்பானங்களை கண்டுபிடித்து கீழே கொட்டி 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், பல்வேறு பகுதிகளில் உள்ள உணவுக் கடைகளில் காலாவதியான பொருட்களை விற்கக் கூடாது என்றும், அவ்வாறு காலாவதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை