undefined

 அதிர்ச்சி... கிரேன் சக்கரத்தில் சிக்கி தூத்துக்குடி துறைமுகத்தில் சூப்பர்வைசர்  பலி!

 
 

தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகத்தில் கண்டெய்னர் பெட்டிகள் இறக்கும் பணியின் போது கிரேன் சக்கரத்தில் சிக்கி சூப்பர்வைசர் உயிரிழந்தார்.தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 9வது தளத்தில் கண்டெய்னர் பெட்டிகளை இறக்கும் பணிகளை சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக தூத்துக்குடி மட்டக்கடையைச் சேர்ந்த காட்வின் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று கப்பல் தளத்தில் கண்டெய்னர் பெட்டிகள் இறக்கும் பணிகளை கண்காணித்தபோது, எதிர்பாராத விதமாக கண்டேனர் இறக்கிக் கொண்டிருந்த கிரேனின் சக்கரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, துறைமுக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த காட்வினுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை