சூப்பர்... தமிழகத்தில் 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது... குவியும் பாராட்டுக்கள்!
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவர் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாக உயர்ந்த பெருமைக்குரியவர். இவரை பெருமைப்படுத்தும் வகையில் இவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்நாளில் இந்தியா முழுவதும் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுகிறவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அந்த பட்டியலில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து வேலூர் மாவட்டம் ராஜாக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆர். கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் இருவரும் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.இவர்கள் இருவரும் செப்டம்பர் 3ம் தேதி பிற்பகல் டெல்லியில் உள்ள அசோக் ஓட்டலுக்கு வர வேண்டும்.
3 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை இவர்களுக்கான தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ம் தேதி மாலை 5 மணிக்கு விருது பெறுதல் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் பெறுபவர்களுக்கு ரூ50000 ரொக்கப்பணமும், பதக்கமும் வழங்கப்படும். விருது பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!