undefined

சூப்பர்...   குரங்கு அம்மை  கண்டறியும்  RT-PCR   கருவியை சொந்தமாக உருவாக்கிய இந்தியா!

 


 உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு அம்மை தீவிரமெடுத்து பரவி வருகிறது . இந்தியாவை பொறுத்தவரை  ரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கும், விரைவாக நோயைக் கண்டறிவதற்கும் இந்தியா தற்போது RT-PCR சோதனைக் கருவியை உருவாக்கியுள்ளது. தற்போது, ஆப்பிரிக்கா நாடுகளில் தீவிரம் அடைந்து வரும் குரங்கு அம்மை தோற்று நோயை உலக சுகாதார நிறுவனம்  2வது பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்திருந்தது. இந்த வைரஸ் பரவக்கூடிய ஒன்றாகவும் குறிப்பாக அதிக உயிரிழப்பு விகிதங்களும் பதிவாகியுள்ளன. உலகநாடுகள் இதற்கு முன்னேற்பாடாகப் பல தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  குரங்கு அம்மையை எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது சொந்தமாகவே ஒரு ஆர்.டி-பிஸிஆர்  சோதனைக் கருவியை உருவாக்கி உள்ளது. மத்திய பாதுகாப்பு மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு  , இந்த சோதனைக் கருவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சோதனைக் கருவியை சீமென்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த பரிசோதனை முடிவுகளுக்கு 1-2 மணி நேரம் தேவைப்படும் நிலையில் சோதனைக் கருவி அந்த வழக்கத்தை மாற்றி வெறும் 40 நிமிடங்களிலேயே பரிசோதனையின் முடிவை நமக்குத் தரும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக  அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த குரங்கு அம்மை ஆர்டிபிசிஆர் சோதனைக் கருவிகள், புனேவில் உள்ள ICMR-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மூலம் மருத்துவரீதியாகச் சரிபார்க்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்கள்.


இந்தக் கருவி 1 ஆண்டுக்கு 1 மில்லியன் ரியாக்க்ஷன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இது குறித்து சீமென்ஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் ஹரிஹரன் சுப்ரமணியன்  “இந்தியா, குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வகையில்  சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட இந்த சோதனை கருவிகளை வழங்கியுள்ளோம்.  இதன் மூலம், நோயைத் துல்லியமாகவும் விரைவாகவும் கண்டறிவதில் முக்கியத்துவம் கொடுக்கிறோம், இது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.  குரங்கு அம்மை நோய் கட்டுப்படுத்த அடுத்தகட்ட ஒரு முக்கியமான படியாக  அமைந்துள்ளது”, எனத் தெரிவித்துள்ளார்.