undefined

சென்னையில் ஒருநாள் போட்டி! டிக்கெட் விற்பனை அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும் இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் 17ஆம் தேதியும், 2ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் 19ஆம் தேதியும், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எ,ம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 22ஆம் தேதியும் (பிற்பகல் 1.30) நடக்கிறது.

இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 13ஆம் தேதியும், கவுன்டரில் நேரடி விற்பனை 18ஆம் தேதியும் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச டிக்கெட்டின் விலை ரூ.1,200 ஆகும். சி,டி,இ கேலரிகளுக்கான இந்த டிக்கெட்களை 18ஆம் தேதி காலை 11 மணி முதல் நேரடியாக கவுன்டர்களில் பெற்றுக்கொள்ளலாம். ரூ.1,500 ரூ.3000, ரூ.5000, ரூ.6000 ரூ.10 ஆயிரம் வரையிலான டிக்கெட்களை வரும் 13ஆம் தேதி முதல் பேடிஎம், இன்சைடர் ( www.insider.in ) ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியை நேரில் காணவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. கேமரா, லேப்டாப், ஹெல்மெட், பேக், குடை உள்ளிட்ட பொருட்களை ரசிகர்கள் தங்களுடன் ஸ்டேடியத்துக்குள் எடுத்து வர அனுமதி கிடையாது. உணவு, குளிர்பானம், பிளாஸ்டிக் பைகள், சிகரெட், புகையிலை பொருட்கள் ஆகியவைகளை கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு சென்னையில் சர்வதேச ஒருநாள் போட்டி நடைபெறுவதால் போட்டியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!