undefined

திடீரென தாக்குதல் நடத்திய தற்கொலைப் படையினர்.. 12 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழப்பு!

 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக போலீஸ் மற்றும் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நேற்றிரவு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாகச் சென்று சோதனைச் சாவடி மீது மோதியது. இந்த தாக்குதலில் 12 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!