undefined

 இளைஞர் பேஸ்புக் லைவ் வீடியோவில் தற்கொலை முயற்சி... உடனடியாக செயல்பட்டு காப்பாற்றிய போலீசார்

 
 

ஜெய்ப்பூர் மாநிலம் ஷியாம் நகரில் ஃபேஸ்புக் நேரலையின் போது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாக அறிவித்து விட்டு தூக்கிட்டுக் கொள்ள முயற்சிக்கிறார். பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற இளைஞரை போலீசார் உடனடியாக செயல்பட்டு காப்பாற்றினர். 

போதையில் இருந்த பவன் எனும் இளைஞர், ஃபேஸ்புக் லைவ் வீடியோ ஒன்றை தொடங்கி, தான் தற்கொலைச் செய்துக் கொள்ள இருப்பதாக தனது எண்ணத்தை தெரிவித்து லைவ் வீடியோவை டெலிகேஸ்ட் செய்துள்ளார். இந்த லைவ் ஸ்ட்ரீமைப் பார்த்துக் கொண்டிருந்த பவனின் நண்பர் ஒருவர் உடனடியாக சைபர் செல் போலீசாரிடம் இந்த வீடியோ லிங்க் அனுப்பி அவர்களை எச்சரித்து காப்பாற்றக் கோரினார். 

உடனடியாக விரைவாகச் செயல்பட்ட காவல் துறை அதிகாரிகள், அந்த இளைஞரின் பேஸ்புக் பக்கத்தில் இருந்த சுயவிவரத்தின் மூலம் அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிந்து, அவரது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அவரது இருப்பிடத்தைக் கண்காணித்தனர்.

அதன் பின்னர் ஹோட்டல் அறையின் உட்புறம் உள்ளிட்ட வீடியோவில் தெரியும் விவரங்களை  போலீசார் உன்னிப்பாக ஆய்வு செய்தனர். ஷியாம் நகர் பகுதியில் செல்போன் சிக்னல் இருந்ததால் அந்த பகுதியில் இருந்த மூன்று தனியார் ஹோட்டல்களைத் தொடர்பு கொண்டு இறுதியில் அந்த நபர் செக்-இன் செய்த ஹோட்டலுக்கு சென்றனர். 

அதன் பின்னர் அதிரடியாக மாற்று சாவியால் அறையின் கதவைத் திறந்துக் கொண்டு சரியான நேரத்தில் அறைக்குள் நுழைந்த போலீசார் அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினர். அதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசாரின் விசாரணையில், அந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் தான் ஹோட்டல் அறையை முன்பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!