undefined

அதிர்ச்சி வீடியோ... ஸ்கூட்டருடன் மேம்பாலித்திலிருந்து கீழே விழுந்த இளம்பெண்!

 
பாலம் விபத்து

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வெண்பாலவட்டம் மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மேம்பாலத்தின் மீதிருந்து கீழே சர்வீஸ் சாலையில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் கோவளத்தைச் சேர்ந்த சிமி (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்கூட்டரில் சிமியுடன் பயணித்த அவரது மகள் ஷிவன்யா (3), அவரது சகோதரி சீனி (32) ஆகியோர்  இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து நேற்று ஜூலை 1ம் தேதி மதியம் 1 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மூன்று பேர் பயணித்த ஸ்கூட்டர் பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்தது.  விபத்து குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஸ்கூட்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பாலம் விபத்து

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற சினி தூங்கியதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. விபத்தின் போது சிமியும் அவரது மகளும் ஸ்கூட்டரின் பின்புறம் அமர்ந்திருந்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!