திடீரென மறைந்த தந்தை.. மர்மத்தை உடைத்த மகள்.. கையும் களவுமாக சிக்கிய தாய்.. அதிர்ச்சி பின்னணி!
கர்நாடக மாநிலம் பெலகாவி ஆஞ்சநேயா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (47), அவரது மனைவி உமா (42), மகள் சஞ்சனா (18) ஆகியோரின் செய்தி தான் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த அக்டோபர் 9ம் தேதி சந்தோஷ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட பிறகும், அவரது மகள் சஞ்சனாவுக்கு தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருந்தது.
சஞ்சனா வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க முயன்றபோது, அதை அவரது தாய் உமா அழித்தது தெரியவந்தது. இது சஞ்சனாவின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனால், சஞ்சனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இந்த வீடியோவில், உமா மற்றொரு நபருடன் இரவில் பைக்கில் செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளன. விசாரணையில், சமூக வலைதளங்கள் மூலம் மங்களூரை சேர்ந்த ஷோபித் என்ற நபருடன் உமாவுக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சந்தோஷ் இருவரையும் கண்டித்துள்ளார்.
தங்களது உறவை தொடர, உமா ஷோபித் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து சந்தோஷைக் கொல்லத் திட்டமிடுகிறார். தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கணவர் தூங்கிய நிலையில் மூவரும் சேர்ந்து தலையணையால் கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர், இந்தக் கொலையை மறைக்க மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை நடந்ததைக் கண்டுபிடித்த போலீஸார், உமாவைக் கைது செய்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!