undefined

திடீரென தாக்கிய பசு மாடு.. போராடி மீண்ட பெண்.. பகீர் வீடியோ வைரல்!

 

டெல்லியில் குறுகிய பாதையில் நடந்து சென்ற பெண்ணை பசு ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஆயா நகரில் அக்டோபர் 30ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. டெல்லியில் ஒரு குறுகிய பாதையில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்ககு வந்த மாடு ஒன்று அந்த பெண்ணை தாக்கி கீழே தள்ளியது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் சட்டவிரோத பால்பண்ணைகள் அதிகரித்துள்ளதே தெரு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும். சட்டவிரோத பால் பண்ணைகளின் உரிமையாளர்கள் பால் கறந்தவுடன் மாடுகளை தெருவில் விடுகின்றனர். தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் சாலை விபத்துகள் மட்டுமின்றி பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!