undefined

திடீர் ட்விஸ்ட்... தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுவை, கேரளாவிலும் தவெக கொடியுடன் திரையரங்குகளில் குவிந்த விஜய் ரசிகர்கள்!

 

இன்று நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் அதிகாலை முதலே கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியுடன் திரையரங்குகளில் குவிந்து, ‘தி கோட்’ திரைபடத்தை உற்சாகமாய் பார்த்து வருகின்றனர். புதுவையிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

புதுச்சேரியில் அனைத்து திரையரங்குகளிலும் இன்று ‘தி கோட்’ திரைப்படம் ரிலீஸாகியுள்ள நிலையில், சிறப்பு காட்சிகளுக்கும் புதுவை அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, பல  திரையரங்குகள் முன்பு காலை 7.30 மணிக்கே ரசிகர்கள் குவிய தொடங்கினர். தவெக கட்சி கொடிகளுடன், விஜய் உருவ படத்துக்கு முன்பாக திரையரங்கின் முன்பாக வாத்தியங்கள் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினார்கள்.

காலையில் திரையரங்கம் திறந்தவுடன் தவெக கட்சி கொடியை உயரே தூக்கிப் பிடித்தபடி விஜய்க்கு வாழ்த்து கோஷம் எழுப்பியபடி  தியேட்டருக்குள் விஜய் ரசிகர்கள் நுழைந்தனர். படத்தின் டைட்டில் ஓடத் தொடங்கியது முதல் விஜய்யின் அறிமுக காட்சி வரை ரசிகர்கள் உற்சாகத்துடன் விசில் அடித்து படத்தைக் கொண்டாடி வருகின்றனர். 

புதுவை நகர பகுதியில் உள்ள அனைத்து திரையரங்குகள் முன்பும் விஜய் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் திரண்டதால் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று கேரளத்திலும் விஜய் ரசிகர்கள், தவெக கட்சியின் கொடிகளுடன் திரையரங்குகளில் குவிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளத்திலும் நடிகர் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை