undefined

மருமகன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உயிரை விட்ட மாமியார்.. சோக பின்னணி!

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). ஃபாஸ்ட் புட் மாஸ்டர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள சிலுகுவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (21) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது.

பின்னர் நாகம்மாளை அவரது பெற்றோர் தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க சில நாட்களே உள்ள நிலையில், அருண்குமார் தினமும் இரவு தனது மாமனார் வீட்டிற்கு சென்று மனைவியை பார்ப்பது வழக்கம். கடந்த 25ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சிலுக்குவார்பட்டிக்கு சென்ற இவர், அம்மையநாயக்கனூர் சர்ச் எதிரே உள்ள சாலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகள் கர்ப்பமாக இருந்தபோது மருமகன் இறந்துவிட்டதால் நாகம்மாளின் தாய் சின்னப்பொண்ணு (46) கதறி அழுதுள்ளார். இதையடுத்து, நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மாமியார் உயிரிழந்தார். கணவர் இறந்ததையடுத்து, நாகம்மாள் உடல்நிலை மோசமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை