undefined

 இன்று ஐப்பசி பெளர்ணமி.. திருச்செந்தூர் கடற்கரையில் தங்குவதற்கு திடீர் தடை... அதிர்ச்சியில் பக்தர்கள்!

 
 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் வழக்கமாக பெளர்ணமி நாட்களில் பக்தர்கள் தங்கி வழிபாடு நடத்தி வரும் நிலையில் இன்று பக்தர்கள் கடற்கரையில் தங்குவதற்கு திடீரென காவல்துறை தடை விதித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெளர்ணமி நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இரவு தங்கி, முருகனை வழிபாடு செய்தால் நினைத்த காரியம் நடைபெறும் என்று ஐதீகம். இதனால் வழக்கமாக பெளர்ணமி நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இன்று ஐப்பசி மாத பெளர்ணமி என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தொடர்மழை பெய்து வருவதால் கடற்கரையில் பக்தர்கள் தங்க வேண்டாம் என்று பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருச்செந்தூர் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது பக்தர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!