undefined

அடுத்தடுத்து தாக்குதல்.. ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகளை கொன்ற இஸ்ரேல்!

 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி இப்ராகிம் அகில் உடன் குறைந்தது ஒன்பது மூத்த ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.  1983 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு அகில் என  அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த தாக்குதலில் 63 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டில், அகில் அமெரிக்க மரைன் முகாம்கள் மீதான தாக்குதலில் 241 அமெரிக்க வீரர்களைக் கொன்றார். இதையடுத்து, அகிலை பற்றி தகவல் தருபவர்களுக்கு 7 மில்லியன் டாலர் (சுமார் ரூ.53 கோடி) பரிசாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்நிலையில், பெய்ரூட்டில் நடந்த வான்வழித் தாக்குதலில் அகில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். ஹிஸ்புல்லாவின் சிறப்புப் படைகளின் தலைவராகவும் அகில் பணியாற்றினார் என்று இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் ஹிஸ்புல்லா தரப்பிலிருந்து எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை. செப்டம்பர் 20, வெள்ளியன்று லெபனானின் தலைநகரான பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 என கூறப்படுகிறது. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 59. ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகள் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா கூறியது. யாவ் பாராக்ஸில் உள்ள பீரங்கி மற்றும் ஏவுகணை பட்டாலியன் மற்றும் கோட்டையில் அமைந்துள்ள வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்ததாக ஹிஸ்புல்லா கூறினார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!