இடப் பிரச்சனையில் பாரபட்சமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்.. தட்டி கேட்ட ஆம்புலன்ஸ் ஊழியரை தாக்கிய கொடூரம்!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகன் கமல்ராஜ் என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த சிவசங்கரன் மனைவி வசந்தி என்பவருக்கும், இடப்பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில், இரு தரப்பினரையும் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையம் வரவழைக்கப்பட்டு, காவல் உதவி ஆய்வாளர் சிவராமன் என்பவர் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது இடப்பிரச்சனை சம்பந்தமாக, இரு தரப்பினரும், நீதிமன்றம் சென்று தீர்வு செய்து கொள்ளுங்கள் என்று காவல் உதவி உதவியாளர் கூறியதாகவும், அதன் பேரில் இரு தரப்பினரும், காவல் நிலையம் விட்டு வெளியே செல்லும்போது, வசந்தி என்பவரை மட்டும் அழைத்து, பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்று காவல் உதவியாளர் கூறியதாக சொல்லப்படுகிறது.
அப்போது கமல்ராஜ் தரப்பிற்காக, காவல் நிலையத்திற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், பிரச்சனைக்குரிய இடத்தில், உள்ள மரத்தை எதற்காக வெட்ட சொல்கிறீர்கள் என்று கேட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர் சிவராமன், கிருஷ்ணமூர்த்தி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், கிருஷ்ணமூர்த்தி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் காவல் உதவி ஆய்வாளர் தாக்கிய கிருஷ்ணமூர்த்தி, கடந்த 11 வருடங்களாக, 108 ஆம்புலன்சில், மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல் உதவி ஆய்வாளர், 108 ஆம்புலன்சின் மருத்துவ உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!