undefined

அதிர்ச்சி... இ-சிகரெட்டிற்கு அடிமையாகும் மாணவர்கள்... !! 

 

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இ-சிகரெட் புழக்கம் அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து விவாதம் நடைப்பெற்றது. அப்போது இரண்டாம் கல்வித்துறை அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் விவாவதத்திற்கு பதிலளித்துப் பேசினார். அப்போது பேசியதாவது, 

சுமார் 800 பள்ளி மாணவர்கள் இ-சிகரெட் பயன்படுத்தியன் பேரில் சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களிடையே இ-சிகரெட் பழக்கத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு சுமார் 50 மாணவர்களே இ-சிகரெட் பயன்படுத்தியதாக சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், மாணவர்களிடத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் இ-சிகரெட் பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும், இதுகுறித்து கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் கவலை அடைந்திருப்பதாகவும் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறினார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் இ-சிகரெட் விற்பனை செய்யவும், வாங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.