undefined

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதி!

 

சென்னையின் கம்பீர அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வரும் ரிப்பன் மாளிகையை மாணவர்கள், பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரிப்பன் மாளிகையைச் சுற்றிப் பார்த்து மாநகராட்சி செயல்படும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம். சென்னையில் ரிப்பன் மாளிகையில் தான் தற்போது சென்னை மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 

தனி நபராகவோ அல்லது பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூலம்  கூட்டாகவோ அனுமதி கோரலாம். ரிப்பன் மாளிகையின் வரலாறு அதன் கட்டுமானம், மாநகராட்சி செயல்படும் முறை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்' எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ரிப்பன் மாளிகை கடந்த 1909 ம் ஆண்டு வைசிராயாக இருந்த மிண்டோ பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது.

1913 ம் ஆண்டு   லோகநாத முதலியார் என்பவர் இதனை ரூ. 7.50 லட்சம் செலவில் கட்டிக் கொடுத்தார். ஆனால் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ரிப்பன் பிரபுவின் பெயர் கட்டடத்துக்கு சூட்டப்பட்டது.  2012ம் ஆண்டு இந்த கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இதனை பொதுமக்கள் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!