undefined

அதிர்ச்சி... அரசுப்பள்ளியில் மயங்கி விழுந்த மாணவிகள்!! குளிர்பானம் குடித்ததால் விபரீதம்!!

 

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வருகிறது   ஆற்காடு நாராயணசாமி அரசு மேல்நிலைப் பள்ளி.  இந்தப் பள்ளியில் 500-க்கும் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  11ம் வகுப்பில் படித்து வரும்  ஜனனி, இலக்கியா  இருவரும்   இன்று காலை இருவரும் வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளனர்.அப்போது உடன்படிக்கும் சக வகுப்பு தோழியான தாரணி இருவருக்கும்  குளிர்பானங்களை கொடுத்துள்ளார். அதை ஜனனியும் இலக்கியாவும் குடித்தனர்.

குளிர்பானம் குடித்த சில மணிநேரங்களிலேயே இருவரும் மயக்கமடைந்தனர்.  உடனடியாக வகுப்பு  ஆசிரியை தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்தார்.மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்து மாணவிகளை ஒப்படைத்துள்ளனர். பெற்றோர்கள் இரு மாணவிகளையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 மயக்கம் அடைந்த இரு மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் கூறுகையில் தங்களுடன் படிக்கும் தாரணி என்ற மாணவியிடம் இரண்டு குளிர்பானங்களை கொடுத்து குடிக்க சொன்னதாகவும் அதை தாங்கள் குடித்ததால் தங்களுக்கு மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டதாக கூறுகின்றனர். இவர்களுக்கு குளிர்பானம் அளித்த மாணவியின் தந்தை அரசு மதுபான கடையில் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும்போது, இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்கு வரும்போது தள்ளாடிக்கொண்டே  வந்ததாகவும் உடனே பெற்றோர்களை அழைத்து ஒப்படைத்ததாகவும் மேற்கண்ட இரு மாணவிகளின் தன்னுடன் படிக்கும் மாணவியிடம் குறிப்பிட்ட குளிர்பானத்தை வாங்கி கொண்டு வரச் சொல்லி குடித்ததாக தலைமை ஆசிரியர் தகவல் தெரிவிக்கிறார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும்  பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை