undefined

 மாணவர்கள்  தொடர் போராட்டம்... கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி காலவரையன்றி மூடப்படுவதாக அறிவிப்பு!

 
 

தமிழகத்தில் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியரைக் கண்டித்து, மாணவ - மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருவதை அடுத்து காலவரையன்றி கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக் கல்லூரியின் முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயவாணிஸ்ரீ. இவர், முதுநிலை தமிழ்த் துறை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, சாதிய ரீதியாகவும், பெண்களை தரக்குறைவாகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ - மாணவியர் கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்திருந்தனர். 

ஆனால், பேராசிரியர் மீது கல்லூரி நிர்வாகம் இது வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவ - மாணவியர் கடந்த 15ம் தேதி முதல் தொடர்ந்து வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

'இளைஞர் அரண்’ என்ற அமைப்பின் சார்பில், மாணவ - மாணவியர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கல்லூரியின் ஆட்சி மன்றக்குழு முடிவின்படி இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையன்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் அ.மாதவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கல்லூரியில் நிலவும் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின் படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையன்றி மூடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை