கழிவறையில் மாணவியுடன் உடலுறவு.. ஆசிரியருக்கு வாழ்நாள் முழுவதும் பணி செய்ய தடை!

 

இங்கிலாந்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஆசிரியராக வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கல்வித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

இங்கிலாந்தைச் சேர்ந்த Erin Hepplewhite (32) என்பவர் 16 வயது மாணவியுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இச்சம்பவம் 2018ல் நடந்ததால், அவர் மீண்டும் ஆசிரியர் பணிக்கு வர முடியாது என ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், பத்து வயது சிறுமியை முறையற்ற முறையில் தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதற்காக எரினுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது, எரின் சிறுமிக்கு வெளிப்படையான பாலியல் செய்திகளையும், படுக்கையில் இருவரும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களையும் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.

காதலர் தினத்தன்று அவர்கள் உணவருந்திய உணவகத்தின் கழிவறையில் எரின் முதல் முறையாக சிறுமியுடன் உடலுறவு கொண்டார் என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், சிறுமிக்கு முதல் முறையாக முத்தம் கொடுத்தது எரின் தான் என சிறுமியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  சிறுமியின் பெற்றோர் அவரது போனை எடுத்து பார்த்தபோது அதில் ஆபாசமான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் இருந்ததை கண்டனர். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. எரின் மீது 13 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவனுடன் உடலுறவு கொண்டதாகவும், மைனர் ஒருவருடன் உடலுறவு வைத்து அவனது நம்பிக்கையை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தற்போது தண்டனை காலம் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் மீண்டும் ஆசிரியர் பணிக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கற்பித்தல் ஒழுங்குமுறை முகமையின் மார்க் கேவி வெளியிட்ட அறிக்கையில், "இந்த விஷயத்தில், எரின் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் குற்றங்களின் மிகவும் தீவிரமான தன்மையை நான்  நன்கு புரிந்துக்கொண்டேன். எரின் சார்பாக அவரின் வருத்தத்திற்கான ஆதாரம் இல்லாததையும் நான் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன்.  

எரின் ஆசிரியராக வேலை செய்ய தடை விதிக்கப்படுகிறது. எனது பார்வையில், ஆசிரியர் தொழிலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு எரினுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம். எரினுக்கு கடுமையான தண்டனை விதித்ததற்கான காரணத்தை கற்பித்தல் ஒழுங்குமுறை முகமை விளக்கியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்