undefined

கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்... 10 நாட்களான பிறகும் கண்டுபிடிக்க முடியாத சோகம்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி ஒருவர், வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்வதாக கடந்த 21ம் தேதி காலை கூறிவிட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இது குறித்து மாணவியின் தந்தை புகாரளித்த நிலையில், மாணவி காணாமல் போய் 10 நாட்களான நிலையிலும் இன்னும் மாணவி குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.

தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்தவர் ரெனால்ட். இவரது மகள் மரிய டிசோசா (19). தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் ம்ரிய டிசோசா பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டிலிருந்து கடந்த நவம்பர் 21ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்ற நிலையில் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் மரிய டிசோசாவைத் தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரது தந்தை ரெனால்ட் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!