undefined

விஷமானது உணவு... கல்லூரி விடுதியில் சாப்பிட்ட மாணவி திடீர் மரணம்! 

 
 இந்தியாவில் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட உணவு விஷமானதால் சிகிச்சைப் பெற்று வந்த நர்சிங் மாணவி சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.  கேரள மாநிலம் ஹரிபட்டில் உள்ள சேப்பாட்டை சேர்ந்த தம்பதியர் பிரதீப் மற்றும் ஷைலஜா. இந்த தம்பதியரின்  மகள் பிரவீணா. ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பல வருடங்களாக இவர்கள் குடியேறி வசித்து வந்தனர். ஷைலஜா ஹிசாரில் உள்ள வித்யா தேவி ஜிண்டால் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். 

 

பிரவீணா(20) டெல்லியில் உள்ள விஎம்சிசி செவிலியர் கல்லூரியில், கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்தப்படி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவி பிரவீணாவுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. முதலில் ஹரியானாவில் உள்ள ஜிண்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பிரவீணா, பின்னர் ஹரிபாட் மற்றும் பருமலா மருத்துவமனைகளுக்கு மேல்சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டார்.

பின்னர் அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். திருவனந்தபுரத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தா