undefined

இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் | ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று செப்டம்பர் 5ம் தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இது குறித்த அறிவிப்பைத் தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் வெளியிட்டிருந்தார். அதனால் இன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்காது.

தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும். அதே போன்று 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும். பழுதடைந்த நியாய விலைக்கடைகளை சீரமைக்க வேண்டும்” உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலங்களாகவே வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள 35,000 நியாய விலைக் கடைகளின் பணியாளர்கள் அனைவரும் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். வழக்கம் போல் வார நாட்கள் என நினைத்து ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பாதீங்க. இன்று ரேஷன் கடைகள் இயங்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா