undefined

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை... மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்பி நன்றி!

 

தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கனிமொழி எம்பி நன்றி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் கடிதம் வழங்கியிருந்தேன். 

எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!