undefined

கலங்கிய விஜய்... கதறிய புஸ்ஸு ஆனந்த்... விஜய் மாநாட்டு பணியில் ஈடுபட்டு வந்த தவெக மாநில செயலர் திடீர் மரணம்!

 
 

 


இது போன்ற சம்பவம் தான் நடந்து விடக்கூடாது என்று தன்னுடைய ஒவ்வொரு அடியையும் ரொம்பவே நிதானித்து, கவனத்துடன் செயலாற்றி வந்தார் நடிகர் விஜய்.ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் என்று ஒவ்வொரு கூட்டத்தின் போதும், மாநாடு முக்கியம். ஆனா அதே சமயம் உங்க பாதுகாப்பு முக்கியம் பிகிலு என்பதாக தான் விஜய் வார்த்தைகள் இருந்தது. புஸ்ஸு ஆனந்திடமும், ‘கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் கண்டிப்பாக மாநாட்டிற்கு வர வேண்டாம். ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம். அனைவரும் பாதுகாப்பாக வந்து திரும்புவதை உறுதிப்படுத்திக்கோங்க’ என்று பல முறை கறார் காட்டியிருந்தார்.

இந்நிலையில், விஜய் மாநாட்டு பணியில் ஈடுபட்டுவிட்டு, வீடு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்த புதுச்சேரி தமிழக வெற்றிக்கழக மாநிலச் செயலர் சரவணன் (47) திடீரென இன்று காலை உயிரிழந்தார்.நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் புதுவை மாநில செயலர் சரவணன் (47). புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த சரவணனனுக்கு, மனைவி தேவியும் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சரவணன் நடிகர் விஜயின் தீவிர ரசிகராகவும், ரசிகர் மன்ற முன்னோடியாக இருந்து வந்துள்ளார்.

தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், த.வெ.கட்சியின் புதுவை மாநிலச் செயலராகவும், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு மிக நெருக்கமானவராக திகழ்ந்து வந்தார். இம்மாதம் 27ம் தேதியன்று விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டு வேலைகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வந்துள்ளார்.

பல நாட்களாக விக்கிரவாண்டியில் தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், புதுச்சேரி திரும்பிய அவர் நேற்று மாலை  வீட்டில் இருந்த போது திடீரென லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.அவரது குடும்பத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், சரவணனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து சரவணன் உடல் புதுச்சேரி, சித்தன்குடியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கட்சி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!