undefined

குஷியில் ஸ்டாலின்... நாளைய திமுக பவளவிழாவில் ஹைலைட்டே செந்தில் பாலாஜி தானாம்!

 

நாளை காஞ்சிபுரத்தில், திமுக பவள விழா ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், நாளைய விழாவில் செந்தில் பாலாஜி தான் ஹைலைட்டே என்கிறார்கள். முன்னதாக நேற்று முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்திருக்கிறார். இந்த சிறைவாச காலத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராகவோ, ஸ்டாலினுக்கு எதிராகவோ அவர் எந்தவிதமான காய் நகர்த்தலும் செய்யவில்லை என்பதால் ஸ்டாலினின் நெருக்கமானவர்களின் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

அமைச்சரவையில் மாற்றம் வரும்.. மாற்றம் இருக்கு... காலம் கனியவில்லை என்று இதுநாள் வரை ஸ்டாலின் சொன்னது எல்லாம் செந்தில் பாலாஜியின் ஜாமின் தள்ளிப் போய்க்  கொண்டிருந்ததைத் தான் என்கிறார்கள். இப்போது அமைச்சரவையில் மாற்றம் உறுதி. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் நிலையில், அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் முதல்வரின் பேச்சில் அனல் பறக்கும் என்கிறார்கள்.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திமுக, செந்தில் பாலாஜி வழக்கில் உச்சக்கட்ட டென்ஷனில் இருந்து வந்த நிலையில், தற்போது திமுக தொண்டர்களிடையேயும் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. 

நாளை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி பங்கேற்கிறார். செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்று நீதிமன்றம் எதுவும் உத்தரவு பிறப்பிக்காத நிலையில், அமைச்சரவை மாற்றத்தில் செந்தில்பாலாஜியின் பெயரும் சேர்க்கப்பட உள்ளது.  செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது என்று உச்சநீதிமன்றம்  பிணையில் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், முதல்வர் பரிந்துரையை ஆளுநர் ஏற்பாரா? அல்லது காலம் தாழ்த்தி முடிவெடுப்பாரா என்கிற விவாதங்கள் ஒருபுறம் நடந்துக் கொண்டிருக்கிறது.

உதயநிதி துணை முதல்வர் பதவிக்கு க்ரீன் சிக்னல் எப்போதே கிடைச்சுடுச்சாம். மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், உறவினர்கள், கட்சியினர் என்று உதயநிதி துணைமுதல்வர் விஷயத்தில் எந்த முட்டுக்கட்டையும் இதுவரை உருவாகவில்லை. முதல்வர் ஸ்டாலின் தான் உதயநிதி விஷயத்தை காலம் தாழ்த்தி வருகிறார். செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்காகவே முதல்வர் இதுநாள் வரை காத்திருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜாமீன் மனு மீதான இறுதி தீர்ப்பு என்று உச்சநீதிமன்றம் தேதி குறித்த போதே, எப்படியும் செந்தில் பாலாஜி வெளியே வந்தவுடன் சேர்த்து, அமைச்சரவையில் மாற்றம் செய்துக்கலாம் என்று அறிவாலயத்தில் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின். 

நாளைய திமுக பவள விழா களைகட்டும் என்றும், இந்த விழாவில் செந்தில் பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் தரும்படியும் மூத்த தலைவர்களுக்கும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!