அனைத்து ஊராட்சிகளிலும் ”ஸ்போர்ட்ஸ் கிட்”.. டெண்டர் விடப்பட்ட புதிய திட்டம்..!

 
அனைத்து ஊராட்சிகளிலும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் திட்டத்தின் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட சபையில் தனது துறை மானியக் கோரிக்கையின் போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பொன் விழாவை முன்னிட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்" கீழ் ரூ.42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், அனைத்து ஊராட்சிகளிலும் கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டின் மீது அதீத ஆர்வம் உடையவர்கள். இவர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களிடம் தேவையான விளையாட்டு உபகரணங்கள் இருப்பதில்லை. எனவே கருணாநிதி நூற்றாண்டு பொன்விழா ஆண்டான 2023-ல் மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் "டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்" கீழ் அனைத்து ஊராட்சி களுக்கும், ரூ.42 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் 33 விளையாட்டு பொருட்கள் அடங்கிய கலைஞர் விளையாட்டு கிட் விரைவில் வழங்க இப்போது டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.