undefined

ப்ளீஸ்... உதவி செய்ங்க... 2 வயது குழந்தைக்கு  முதுகெலும்பு தசை சிதைவு நோய்... சிகிச்சைக்கு ரூ 16 கோடி... கதறும் பெற்றோர்!

 

 கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் வசித்து வருபவர்  சுரேஷ்குமார், நித்யாதேவி, தம்பதியினர் . இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள். இவ குழந்தைப்பருவம் முதலே மற்ற குழந்தைகளை போல் சுறுசுறுப்பாக இல்லாமலும், நடக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார்.  பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துவந்தனர். இதில் எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு வகையான பரிசோதனைகள், செக்கப்புகள் தொடர்ந்தன.  குழந்தைக்கு மரபணு சோதனை முடிவில் SMA எனும் முதுகெலும்பு தசை சிதைவு நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

 இந்த அரிய வகை நோய்க்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர் பப்டிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பெற்றோர் கண்டறிந்து குழந்தையை அங்கே அழைத்து சென்றனர். மருத்துவர் குழந்தையை பரிசோதித்து விட்டு  இதற்கு சிகிச்சை அளிக்க விட்டால் உயிர் போகும் அபாயமும் ஏற்படும் எனக் கூறியுள்ளார். அத்துடன்  இந்த நோய்க்கு இந்தியாவில் மருந்து இல்லாததால் ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும்.  

இந்த மருந்துக்கு ரூ.16 கோடி வரை செலவாகும் என தெரிவித்து உள்ளனர். எனவே இந்த அரிய வகை நோயில் இருந்து தங்களது குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் இச்செயலை செய்து முடிக்க  மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!