undefined

ரூ.5 லட்சம் செலவு... தடபுடல் விருந்து வைத்து நாய்க்கு பர்த்டே கொண்டாடிய இளம்பெண்!

 

செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் அதையும் வீட்டில் ஒரு ஜீவனாகவே கருதி தான் வளர்ப்பர். இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கங்களில் ஒன்று தான். குறிப்பாக, நாய், பூனையை செல்லப்பிராணிகளாக வளர்ப்பவர்கள் அதற்கென பிரத்யேக பெயர்களில் செல்லமாக கொஞ்சுவது உண்டு.  

இப்படி செல்லப்பிராணிகளின் மீது மனிதர்கள் வைத்திருக்கும் அளவுகடந்த அன்பிற்கு எந்த எல்லையும் இல்லை என அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் நிரூபித்துகொண்டே உள்ளன. அந்த வகையில்  ஜார்கண்ட் மாநிலத்தில் ஆச்சர்யமூட்டும் நிகழ்வு ஒன்று நடந்தேறியுள்ளது. அதன்படி  ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் வசித்து வருபவர் சப்னா .  

இவர் சமீபத்தில் தனது வளர்ப்பு நாய்க்கு பிறந்தாள் விழா எடுத்துள்ளார். இதுகுறித்தான வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

சப்னா தனது வளர்ப்பு நாயின் பிறந்தநாளை ரூ. 5 லட்சம் செலவில் கொண்டாடியுள்ளார். அந்த பிறந்த நாள் விழாவில்  கேக் மட்டுமே ரூ 40,000 மாம்... அதோடு 300 பேருக்கு தடபுடலான விருந்து, நாய்க்கென்று அசத்தலான ஆடை - அலங்காரம், பிறந்த நாள் அழைப்பிதழ் அட்டை, விழா நடைக்கும் மண்டபத்தில் fog , டிஜே என  பார்ட்டியில் எதற்கும் குறையே இல்லை.. இந்த வீடியோவை பார்த்து பாருடா நாய்க்கு வந்த வாழ்வை... பிறந்தாலும் இவங்க வீட்டு நாயா தான் பிறக்கணும் என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! .