undefined

தறிகெட்டு ஓடிய பைக்... சுவற்றில் மோதி மூளை சிதறிய் இளைஞர் மரணம்!

 

திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் விமான நிலைய நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் மற்றும் சந்தோஷ் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பாலகிருஷ்ணாபுரம், ரவுண்ட் ரோடு, தாலுகா காவல் நிலையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்தனர்.

வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் எதிர்புறத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வீட்டு சுவரில் மோதினர். இதில் ஜெகதீஷ் என்ற இளைஞர் மூளைச்சாவு அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தோஷ் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருச்சக்கர வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!