undefined

 விநாயகர் சதுர்த்தி | திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் அறிவிப்பு.. பயணிகள் உற்சாகம்!

 
 

தமிழகத்தில் பண்டிகை கால கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி முடிந்த நிலையில், செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். அதே சமயம் தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


பண்டிகைக் காலங்களில் சொந்த ஊரில் உறவினர்களோட கொண்டாட வசதியாக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் அறிவிக்கப்படுவது வழக்கத்தில் இருந்து வருகின்றது.அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை - தாம்பரம் இடைய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லையில் இருந்து இன்று செப்டம்பர் 4ம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06040) நாளை செப்டம்பர் 5ம் தேதி காலை 11.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை