undefined

 இன்று மதுரையிலிருந்து சிறப்பு ரயில்.... முன் பதிவு தொடக்கம்!

 

 தமிழகத்தில் கடந்த வார இறுதியில்  3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து பலர் சொந்த ஊர் சென்றிருந்தனர். இவர்கள் பணி செய்யும் இடங்களுக்கு திரும்பும் வகையில் இன்று  மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இரவு 8.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக காலை 6:30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

 சனி, ஞாயிறு மற்றும் கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு மக்கள் சென்றனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் மீண்டும் சென்னை திரும்ப  ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகளவு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் ஏற்னவே அறிவிக்கப்பட்டிருந்தது. தெற்கு ரயில்வே சார்பாக தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கும், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் ரயில்கள் இயக்கப்படுகிறது.இந்நிலையில் ரயில்களில் நிரம்பி வழியும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு ஒரு வழி சிறப்பு ரயிலானது இயக்கப்படுகிறது (ரயில் எண் 06184) இந்த ரயிலானது இன்று(27.08.2024) இரவு 8.50 மணியளவில் மதுரையில் இருந்து புறப்படுகிறது. தாம்பரத்திற்கு நாளை காலை 6:30 மணிக்கு வந்து சேருகிறது.  

முன் பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் ஒன்றும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மூன்றும், முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் ஆறும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 7 இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது. இந்த சிறப்பு ரயில்  மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு வந்து சேர்கிறது. மதுரையிலிருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகின்ற இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை