undefined

திருச்செந்தூர் கோயிலில் தெய்வானை யானைக்கு சிறப்பு பூஜை!

 


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானைக்கு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பராமரிக்கப்படும் தெய்வானை என்ற பெண் யானை தாக்கியதில் பாகன் உள்பட 2 பேர் கடந்த நவ.18ம் தேதி உயிரிழந்தனர். இதையடுத்து அந்த யானை, அதன் குடிலிலேயே நிறுத்தப்பட்டு வனத் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினரால் கண்காணிக்கப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, யானைக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்குப் பிறகு அதன் குடிலில் இருந்து தெய்வானை யானை நேற்று வெளியே அழைத்து வரப்பட்டது. பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் யானைக்கு நவதானிய உணவுகளை வழங்கி, குடிலுக்கு வெளிப் பகுதியில் காற்றோட்டமான இடத்தில் நிறுத்தினர்.

திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் ஆகியோர் யானையை பார்வையிட்டனர். இச்சம்பவத்தையொட்டி, யானைக்கு பரிகார பூஜையாக ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் யானைக்கும், அதன் தங்கும் இடத்திலும் தெளிக்கப்பட்டது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!