undefined

இன்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்...!!

 

இன்று சட்டபேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக  ஆளுநர் கிடப்பில் இருந்த மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். அத்துடன்  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில்  வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு   உச்ச நீதிமன்றத்தில்   மனு தாக்கல் செய்தது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்த மனுக்கள் நாளை மறுதினம் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும்   சூழலில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 2  மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள்  என 10 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. இதற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் நவம்பர் 13ம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். 


இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்த பல்கலைகழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்குவது, சித்த மருத்துவ பல்கலை., உருவாக்குவது உட்பட  10 மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு| மூலம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!