undefined

மாணவர்களுக்கு சிறப்பு கட்டணம் : கலங்கரை விளக்கை பார்வையிட சலுகை!

 

மணப்பாடு மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கை பார்வையிட மாணவர்களுக்கு சிறப்பு சலுகை கட்டணம் வழங்கப்படுவதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையோரம் இயற்கையாக கல்லும் மணலும் அமைந்த சுமார் 60 அடி உயர மணல் குன்று உள்ளது, இந்த மணல் குன்றின் மேல் திருச்சிலுவைநாதர் ஆலயத்தின் பின்புறம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கலங்கரை விளக்கு பூங்கா, கடல் வழி ஊடுருவலை கண்காணிக்க உயர் கோபுர கேமரா உள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை. 

கடற்கரைக்கு செல்லும் மக்கள் உள்ளே சென்று பார்க்க முடியாமல் கடற்கரையில் வெளியில் இருந்து பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில் தற்போது இந்த கலங்கரை விளக்கு மற்றும் பூங்காவை பொதுமக்கள் உள்ளே சென்று பார்வையிட கடந்த மாதம் ஜூன் 7ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரையும், சனி, ஞாயிறுகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் பார்வையிடலாம்.

இந்தியர்களுக்கு நுழைவுக்கட்டணமாக 10 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 25 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். பார்வையாளர்கள் அடையாள அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் என கலங்கரை அலுவலர் மதனகோபால் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.இதனையொட்டி ஏராளமான மக்கள் தினசரி குடும்பம் குடும்பமாக மணப்பாடு வர தொடங்கினர். மணப்பாடு வரும் மக்கள் கலங்கரை விளக்கு உள்ளே சென்று அதில் ஏறி இறங்கி பார்ப்பதும் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்வதும் பின்பு பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

தற்போது ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கூடத்தின் சார்பில் வர தொடங்கினர். மாணவ-மாணவிகள் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறி செல்பி எடுப்பதும் ஆசிரியருடன் அமர்ந்து போட்டோ எடுப்பதும் அங்குள்ள பூங்காக்களை சுற்றி பார்ப்பது, அதன் பின்பு கடற்கரைக்கு சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணல்குன்று மீது உள்ள புனித சவேரியார் வாழ்ந்த குகை, நாழிக்கிணறு, தியான மண்டபம் ஆகியவற்றை பார்த்து ரசித்து வருகின்றனர். மாணவர்களுக்கு சிறப்பு சலுகை கட்டணமாக ஒருவருக்கு ரூபாய் 3 வசூலிக்கப்படுகிறது. பள்ளிக்கூடம் சார்பில் மொத்தமாக வந்தால் மேலும் சிறப்பு சலுகைகள் உண்டு என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!