undefined

குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நாணயம் வெளியீடு.. கெளரவித்த பாகிஸ்தான் அரசு!

 

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் அவர்களின் 555வது பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களால் நவம்பர் 15ம் தேதி கொண்டாடப்பட்டது.இந்நிலையில் குருநானக்கின் 555வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நினைவு நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. . சிறப்பு நாணய வெளியீட்டு விழாவில் 2,500க்கும் மேற்பட்ட இந்திய சீக்கிய யாத்ரீகர்கள் பங்கேற்றனர்.

30 மிமீ விட்டமும், 13.5 கிராம் எடையும் கொண்ட இந்த சிறப்பு நாணயம், 79 சதவீதம் பித்தளை, 20 சதவீதம் துத்தநாகம், 1 சதவீதம் நிக்கல் ஆகியவற்றால் ஆனது. இந்த நினைவு நாணயம், ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் வங்கியின் அனைத்து கிளைகளின் எக்ஸ்சேஞ்ச் கவுன்டர்களிலும் கிடைக்கும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு பாகிஸ்தான் இதேபோன்ற சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!